மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு அக்கறை இல்லை: கனிமொழி

373 0

201611151309536327_admk-is-not-interested-in-the-problems-of-people-says_secvpf500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தமிழக மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு எப்போதும் அக்கறை இருந்ததே இல்லை என்று கனிமொழி எம்.பி. பேட்டி கூறியுள்ளார்.

டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. தி.மு.க. சார்பாக காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிப்போம்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று மத்திய அரசு பலமுறை உறுதி அளித்தும் அதை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசு இந்த முறையாவது ஜல்லிக்கட்டை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சாதாரண, நடுத்தர, ஏழை எளிய மக்கள் பெரிதும் துன்பப்பட்டு வருகிறார்கள். அவர்கள் படும் அவதி பற்றியும் நாடாளுமன்றத்தில் பேசுவோம். தமிழ்நாட்டில் இது தொடர்பாக அ.தி.மு.க. அரசு எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு எப்போதும் அக்கறை இருந்ததே இல்லை. இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.