விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் இரண்டாம் கட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கும் என்று சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இந்த திட்டம் அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களை மையமாகக் கொண்டதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியயாவசிய தேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் திட்டத்தின் கீழ் எந்தவொரு இடைத்தரகர்களும் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக பயனடையக்கூடிய வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எம்பிலிப்பிட்டி, லுனுகம்வேர, அகுனுகொலபெலெச மற்றும் சூரியவேவ ஆகிய இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.