யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் மீது நிர்வாக முறைகேடுகள் தாெடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மத்திய அரசாங்க உத்தரவுக்கமைய ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு வசதியாக, விசாரணைகளில் அவரது தலையீடுகளை தவிர்ப்பதற்காகவும் உடனடியாக பொறுப்புக்களை பதில் வைத்திய அத்தியட்சகரிடம் கையளிக்குமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் இன்று (14) பணிக்கப்பட்டார்.
“எனினும் அவர் இன்று மாலை வரை பொறுப்புக்களை கையளிக்கவில்லை. இதனால் அவர் ஆவணங்களையும் சாட்சிகளையும் திரிபுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரோ என எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொறுப்புக்களை பதில் பணிப்பாளர் மருத்துவர் கமலநாதன் நாளை (15) காலை 8.30 மணிக்கு முன்பாக பொறுப்பேற்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்”
இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பருத்தித்துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.