தினமும் 30 கிமீ பயணம்… சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆர்வலர்

309 0

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவர், தினமும் 30 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளில் சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசு பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடித்தால் மட்டுமே வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முடியும். எனவே, சமூக விலகல் குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அவ்வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த தினேஷ் குப்தா (வயது 47) என்பவர் சைக்கிளில் சென்று மக்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தினமும் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிச் செல்கிறார். சைக்கிளில் விழிப்புணர்வு பதாகைகளை கட்டியிருக்கிறார். ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி வலியுறுத்தி வருகிறார்.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகலின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 377 பேர் உயிரிழந்துள்ளனர்.