தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – அன்புமணி

349 0

201611151311363499_anbumani-emphasis-committed-suicide-farmer-family-25-lakh_secvpfதற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகத்துக்கே உணவு படைக்கும் கடவுள்கள் என்று போற்றப்படும் உழவர்கள் வறட்சி மற்றும் அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் தொடர்ந்து உயிரை மாய்த்துக் கொள்வது மிகுந்த அதிர்ச்சியும், துயரமும், வேதனையும் அளிக்கிறது. ஈரோட்டிலும், வேதாரண்யத்திலும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட 2 உழவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். அதுமட்டு மின்றி, உச்சவரம்பு இல்லாமல் அனைத்து உழவர்களின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அனைத்து உழவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.