பண்டாரகம அட்டுலுகம கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமையை தொடர்ந்து முடக்கப்பட்ட அந்த கிராமம் இன்றைய நிலையில் முழுமையாக தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முடித்திருந்தாலும் அந்த கிராமம் தொடர்ந்தும் பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் உள்ளது.
கடந்த மார்ச் 27 ஆம் திகதி குறித்த கிராமம் முழுமையாக முடக்கப்பட்டதுடன் அந்த கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 20 பேர் பண்டாரகம, அளுத்கம சர்வோதய மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களிடம் மேற்கொண்ட பரிசோனையில் அவர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என கண்டறியப்பட்டது.
இதனையடுத்து 16 நாட்களுக்கு பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.