வட தமிழீழத்தில் நல்லூர் முருகனும் தனித்துப்போனாரா?

490 0
முப்பது வருட கால விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தின் போதும் தமிழ் புத்தாண்டிற்காக முடங்காத நல்லூர் கந்தசுவாமி கோவில்  அமைதியாகியுள்ளது.

தியாகி லெப். கேணல் திலீபன் உண்ணாவிரதம் இருந்து தியாக மரணம் அடைந்த நல்லூர் மண் இந்திய,சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின்  போதும் தலைவணக்காத சங்கிலியன் ஆண்ட மண் இன்று ஆட்டம் கண்டுள்ளது.
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்க நடைபெறும் விசேட புத்தாண்டு ஆராதனைகள் ஏதுமில்லாமல் காவல் துறை கண்காணிப்பில் ஆலய சூழல் இம்முறை கடந்து சென்றுள்ளது.
இதனிடையே நாடளாவியரீதயில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும் நோக்கில் நேற்;று மா லை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணிவரை நாடு முழுவதும் சிறிலங்கா காவல் துறை  சுற்றிவளைப்புக்களை நடத்தப்படுமென சிறிலங்கா அரசாங்கம்  அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் மாலை 6 மணி தொடக்கம் இன்று (14) மாலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுமென ஒலிபெருக்கி பூட்டப்பட்ட வாகனங்களில் காவல்துறை அறிவிப்புக்களை குடாநாடெங்கும் இன்று முன்னெடுத்திருந்தது.
இதனால் நல்லூர் உள்ளிட்ட அனைத்து இந்து ஆலயங்களும் இம்முறை வெறிச்சோடியிருந்தன.