காணாமற்போனோர் அலுவலகம் ஜனவரி 1இல் இயங்கும் – மங்கள சமரவீர

310 0

mangala-unhrc1காணாமற்போனோர் அலுவலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி இயங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டபின்னர் குறித்த அலுவலகம் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலகத்துக்கான 7 உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவை நியமிக்கும்.

இந்நிலையில், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஆலோசனைச் செயலணி, சிறீலங்கா அதிபரிடம் முன்வைக்கும் என்றும் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.