ஆவா குழுவுக்கும், பிரிகேடியர் சாலியின் இடமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை

346 0

tumblr_inline_nygmfxhqgm1qb1icv_500ஆவா குழுவுக்கும், பிரிகேடியர் சாலியின் இடமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லையெனவும், அது இராணுவத்தின் உள்விவகாரம் என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ‘பிரிகேடியர் சுரேஸ் சாலியின் இடமாற்றத்தை தவறாக அர்த்தப்படுத்தவேண்டாம்.

உண்மையைச் சிதைக்கும் வகையிலும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கிலும், குறிப்பாக சமூக ஊடகங்கள் இந்த இடமாற்றத்தை தவறாக அர்த்தப்படுத்தி வருகின்றன.

இது இராணுவத்துக்குள் வழமையாக இடம்பெற்றுவரும் இடமாற்றமே. பிரிகேடியர் சுரேஸ் சாலி ஏனைய அதிகாரிகள் போல் இராணுவத் தளபதியினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் இராணுவப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து இராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலத்திலும் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதிகாரிகள் காலத்துக்குக் காலம் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இது இராணுவத்தின் உள் விவகாரம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.