கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

328 0

stonesகொழும்பிலுள்ள முன்னணி வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூதரகத்தின் எல்லைச்சுவரைத் தாண்டி அயலில் வசிப்பவர்கள் கல்வீச்சுத் தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருவதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, சிறீலங்கா காவல்துறையிலும், பாதுகாப்பு அமைச்சிலும் தூதரக அதிகாரிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

பல ஆண்டுகளாக நில உரிமை தொடர்பாக இருந்து வந்த பிரச்சினைகளை அடுத்து, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலம் மீட்கப்பட்டு அந்த இடத்திலேயே இந்த தூதரகம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே தூதரகம் மீது பல தடவைகள் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.