யேர்மனி , சின்டில்பிங்கன் நகரில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்திருந்த லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் மற்றும் மேஜர் செல்வம் ஆகிய மாவீரர்களின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது .
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவருடன் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டன .அதனைத்தொடர்ந்து இம் மாவீரர்களுக்கு மக்களால் மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தப்பட்டு , விடுதலை நோக்கிய கவிதைகள் ,நினைவுரைகள் இடம்பெற்றன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உன்னத அர்ப்பணிப்பை செய்த மாவீர்களை நெஞ்சில் நிறுத்தி எத்தடை வரினும் எமது தாயக விடுதலை போராட்டத்தை தளராத துணிவோடு தமிழீழம் மலரும் வரை தாங்கிச் செல்வோம் என உறுதி எடுத்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்தை அனைவரும் ஓங்கி ஒலித்து உணர்வு பூர்வமாக நிகழ்வு நிறைவடைந்தது.