பலாங்கொடை மேயர் சமிக வெவகெதரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான அவர், பண்டாரவளையில் இருந்து கொண்டு வந்த மரக்கறிகளை பலாங்கொடையில் வைத்து விற்றார்கள் என்று குற்றம்சாட்டி பலாங்கொடை மேயர் சாமிக்க அவற்றின் மீது மண்ணெண்ணெய் விசிறினார்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தபோதிலும் விற்பனையாளர்கள் காய்கறிகளை எடுத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை கவனத்தில் எடுத்துள்ளது என்றும் மேயருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கட்சியின் செயற்குழு முடிவு செய்யும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.