இஸ்ரேலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,145 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சகம், “ இஸ்ரேலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 11,145 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 267 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 110 பேர் பலியாகினர்.
1,627 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.100க்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் கரோனா வைரஸுக்கான பரிசோதனை உபகரணங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால் பரிசோதனை எண்ணிக்கை குறைவாக நடந்தப்படுகிறது என்று இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன.
உலகம் முழுவதும் சுமார் 18 லட்சத்து 53 ஆயிரத்து 505 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கு 14 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.