வைத்தியர்களின் பரிந்துரையும் மருந்து துண்டு இல்லாமல் மக்களுக்கு எந்தவகையிலும் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம் என சகல மருந்தகங்களின் உரிமையாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் மருந்தகங்கள் மூலம் நிறைவேற்றப்படும் செயற்பாடுகளை வரவேற்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் அனுமதித்த மருந்துகளுக்கு மேலதிகமாக எந்தவித மருந்து பொருட்களையும் விநியோகிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வைத்திய பற்றுச்சீட்டுகள் இன்றி மருந்துகளை விநியோகிப்பது ஒளடத அதிகார சபை சட்டத்திற்கமைய தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒளடத அதிகாரசபை இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெறுமனே வாடிக்கையாளர்களினால் தெரிவிக்கப்படும் நோய் அறிகுறிகளுக்கு ஏற்ற மருந்துகளை வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.