கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசிய மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவற்றை உற்பத்தி செய்வதற்கு மருத்துவம் மற்றும் தொழிநுட்ப துறையினருக்கு ஜனாதிபதி , பிரதமர் தலைமையிலான அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சவர்க்கார வகைகள், மருந்துகள் என்பன அவற்றுள் உள்ளடங்குகின்றன. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சமூக பொறுப்புடன் செயற்படும் தொழிநுட்பதுறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய உள்ளிட்ட மருத்துவ துறையைச் சார்ந்த பலர் மிகுந்த பொறுப்புடன் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சரவையின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று உறுதியளிக்கின்றோம்.