யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினர் பசியினால் ; துன்பப்படுபவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் வேலை இல்லாது பல்வேறுபட்ட மக்கள் உண்ண உணவின்றி துன்பப்படுகின்றதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.&
யாழ்ப்பாணத்தில் அதிகமான ஆலயங்கள் காணப்படுகின்ற ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக பல ஆலயங்களில் இந்தமுறை மஹோற்சவம் நடை பெறுவதற்கு அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
எனவே, ஆலய நிர்வாகிகள் உணவின்றி துன்பப்படுகின்ற மக்களுக்கு அந்த ஆலய மகோற்சவத்திற்கென ஒதுக்கிய நிதியில் ஒரு பகுதியினையாவது துன்படுகின்ற மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மதத்தின் தர்மத்தை நாம் காப்பாற்ற வேண்டும். எனவே நாம் பசியால் கஷ்டப்படுகிற துன்பப்படுகின்றவர்களுக்கு எமது ஆலய மகோற்சவத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியினையாவது கஷ்டப்படுகின்ற மக்களுக்கு வழங்கி உதவ முன்வரவேண்டும்
யாழ்ப்பாணத்திலுள்ள ஆலய நிர்வாகங்கள் கருத்தில் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் அவ்வாறு உதவி செய்ய விரும்புபவர்கள் தத்தமது பிரதேச செயலர் ஊடாக அனுமதி இணைப்பு பெற்றுஏனைய மதத்தவர்கள் வழங்குவது போல நாமும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.