ஏழைகளுக்கு தினமும் உணவு வழங்கும் முஸ்லிம் குடும்பம்

455 0

ஏழை, எளிய மக்களுக்கு கோவை சாய்பாபா காலனியில் வசிக்கும் பல்சமய நல்லுறவு தலைவர் முகமது ரபி என்பவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டிலேயே உணவு சமைத்து தினமும் வழங்கி வருகிறார்.கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம், இடையர்பாளையம் ஆகிய பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த ஏழை, எளிய மக்களுக்கு கோவை சாய்பாபா காலனியில் வசிக்கும் பல்சமய நல்லுறவு தலைவர் முகமது ரபி என்பவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டிலேயே உணவு சமைத்து தினமும் வழங்கி வருகிறார்.

இது குறித்து முகமது ரபி கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் கோவையில் உணவு இல்லாமல் அவதிப்படும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் 500 பேருக்கு தினமும் மூன்று வேளை உணவை எங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து தயாரித்து வழங்கி வருகிறோம். இதற்கு எனது அண்ணன் குடும்பத்தினர் உதவியாக உள்ளனர்.

இதுதவிர 300 குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மாவு, ஒரு லிட்டர் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை தினமும் வழங்கி வருகிறோம்.

ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இவ்வாறு உணவு தயாரித்து வழங்க உள்ளோம் என்றார்.