மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் துன்பங்களை
போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான உண்மையான அரசியல் வேலை’’ – தமிழீழத் தேசியத்தலைவர்
அவர்கள்.
கொரோனா வைரசால் இன்றுவரை (08.04.2020) பிரான்சில் 10,328 வரையிலானோர் இறந்துள்ளனர். 10 தமிழ்மக்களும் இதுவரை இதில் உள்ளடக்கப்படுகின்றனர்.
பல ஆண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும். பலர் வைத்தியத்தின் பின் வீடுகளுக்கு அனுப்பியும்
வைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் ஆண்டு தோறும் இதே காலப்பகுதியில் ஏற்படுகின்ற கிருமித்தொற்றினாலும்
பலர் பாதிக்கப்பட்டும் வீடுகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைவரும் வீடுகளுக்குள்
இருப்பதே பாதுகாப்பு என்ற நாட்டின் அறிவித்தலுக்கு மதிப்பளித்து வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் துரதிஸ்ட
நிலையில் முற்கூட்டியே தமது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிவைத்தவர்களும், அன்றாடம்
உழைப்பில் வாழ்ந்தவர்கள், நாட்டின் வதிவிட உரிமையின்றி வாழ்வாதார அரச உதிவியின்றியும் வாழ்பவர்கள்
என்று பல்வேறு துன்பத்தை குறிப்பாக பாரிசின் புறநகர் பகுதியில் வாழும் மக்கள் அனுபவிக்கத் தொடங்கினர்.
நாடும், பாதுகாப்பு மற்றும் சுகாதார, உள்நாட்டு அமைச்சு சட்டவிதிகளை கடைப்பிடித்தல் தனிமனித
சுயகட்டுப்பாடே அனைத்து மக்களின் உயிர்களைக்காக்கும் என்ற நிலையில் வாழ்வாதாரத் துன்பத்தில் வாழும்
தமிழ் மக்கள் ( ஓரிரு இந்திய மக்களும் சிங்கள மக்களும் அடங்குகின்றனர்) உதவிட முன்வந்தனர். தமிழர்
ஒருங்கிணைப்புக்குழுவும் அதன் உபகட்டமைப்புகளும் முன்வந்தனர். இதில் முக்கிய பங்கை அனைத்துப் பிரதேசங்
களில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் ஈடுபட்டன. இதனை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பரப்புரைப் பகுதியினரும் செயற்பட்டிருந்தனர். மக்களுக்கான அறிவித்தல் முதற்கட்டமாகவும், தொலைபேசியில்
அழைத்து உதவிகோரியவர்கள் அந்த இடத்தைச்சேர்ந்த தமிழ்ச்சங்கத்தினரால் சம்பந்தப்பட்டவர்கள்
இனங்காணப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு அருகில் உள்ள மளிகைக் கடைகளில் உணவு வகைகளைப் பெற்றுக்கொள்ளும் விதமாகமாகவும், செல்ல முடியாதவர்களுக்கு நேரடியாக கொண்டு சென்றும்
வழங்கப்பட்டன. ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்று சரியான காரணமின்றி வெளியில் செல்வதால்
தண்டப்பணம் உட்பட சம்பந்தப்பட்டவரின் வாழ்விட உரிமைக்கும் களங்கம் வரும் என்பதால் பலர் பின்நின்றவேளை சங்கத்தினர் மக்களின் நலனை கருத்திற்கொண்டு அதேநேரத்தில் நாட்டின் சட்டதிட்டத்திற்கு மதிப்பளித்து
வெளியில் செல்லும் படிவத்துடன் தங்கள் உன்னத பணியையாற்றியிருந்தனர். சிலர் அதற்கும் ஆட்பட்டிருந்தனர்.
பேரிடர்காலம் என நாட்டின் சனாதிபதி அறிவித்த நேரத்தில் இவர்களின் பணியானது போராளிகளின் பணியாகவே பார்க்கப்படுகின்றது. வாழ்வாதாரத்தை எதிர்பார்த்த அதிக மக்கள் பிரான்சின் 95 மாவட்டம் மற்றும்,93
மாவட்டங்களில் வசித்து வருபவர்களாவர். இவர்களுக்கான உதவி என்பது ஒரு திருப்தியையும், காலப்பதிவையும்
கொடுத்திருக்கின்றது. அதே போலவே வசதிபடைத்த பல மக்கள் வசதியற்று வாழுகின்றவர்களுக்கு பொருட்களை
வேண்டிச்சென்று வழங்கியமையும் நடைபெற்றுள்ளது.
இந்தச் செயற்பாட்டை தொலைபேசி அடித்து பரீட்சித்துப்
பார்த்தவரும், பரிகாசம் செய்தவர், பார்த்து பல் இழித்தவர்களும், பொய்யான வதந்திகளை பரப்பியவர்களும் உண்டு. ஆனால், இந்த பொய்களுக்கு எதுவும் எடுபடவில்லை என்பதையும் உண்மையை உணர்ந்துள்ளார்கள்
என்பதையுமே இந்தக் கொரோனா உதவிப்பணி காட்டியிருக்கின்ற நிலையில் தனியே இந்த உணவுப்பொருள்
கொடுக்கும் உதவியோடு மக்களுக்கு சுகாதார ரீதியிலான ஆலோசனைகள், விழிப்புணர்வுகள், வதிவிட
உரிமைகள் பற்றிய ஆலோசனைகள், கடந்த பல மாதங்கள் இருந்து பெறப்பட்ட முன்னேற பாட்டுநடவடிக்கைகள். தொடர்புகொண்டு ஒழுங்கு படுத்திக் கொடுத்தமை, அரசு விடயங்களில் உதவப்பட்டதோடு, கண்முன்னால் தேவைப்பட்ட உதவிகளை செய்துகொண்டு தற்பொழுது தாயகத்தில் சிங்கள தேசத்தால் மாற்றான்
தாய்பிள்ளையாய் வஞ்சிக்கின்ற எமது மக்களுக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் அதன் கட்டமைப்புக்கள், தமது மனிதநேயக்கடமையைச் செய்து வருகின்றன. அதேபோன்ற உதவிகள் இன்னும் பல
பின்தங்கிய பகுதிகளில் செய்யப்படவில்லை என்ற நிலையில் அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பிரான்சு
தமிழ்ச் சங்கங்கள் வசதிபடைத்தவர்களிடம் கையேந்திநிற்கின்றனர். பலர் தமது பங்களிப்பையும் வழங்கி
வருகின்றனர்.
Il de france இல் இதுவரை 94 குடும்பங்களுக்கு 50 முதல் 70 ஈரேக்கள் பெறுமதியான உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரான்சு நாட்டிலிருந்து பல்வேறு உதவிகள் தாயகம் நோக்கி செயற்படுத்தப்பட்டே வருகின்றது.
அதில் பிரான்சை தலைமையாகக் கொண்டு செயற்பட்டு வரும் பிரான்சு இலங்கை பழைய மாணவர்கள் ஒன்றியத்தின்
ஏற்பாட்டில் தாயகத்தில் மருத்துவப்பணியை செய்து மக்களை இக்கொடிய வைரசில் இருந்து பாதுகாக்கத் தம்மை
உறுத்திப் பணியாற்றும் வைத்தியர்கள், தாதிமார்கள், ஊழியர்களின் உயிரிலும் பாதுகாப்பிலும் கவனம் எடுத்து
அவர்களுக்கான உடைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டு வருவதும், மக்களின் உணவுப்பிரச்சினையை ஓரளவு தீர்க்கும்
மரக்கறி உணவுகளை பெற்றுக்கொள்ள அதற்கான விதைகளை வழங்கி மக்கள் சிறிய தோட்டங்களை இக்காலப்பகுதியில் வீட்டிலிருந்தே செய்ய ஊக்கிவிக்கும் செயற்பாடுகளுக்கான உதவிகளையும்
முன்னெடுத்துள்ளனர்.
பிரான்சில் உள்ள விளையாட்டுக்கழகங்கள், ஊர்அமைப்புக்களும் தமது கிராமத்திற்கான
உணவு பொருட்களை பெற்று மக்களுக்கு வழங்கும் பணிகளுக்கு பணஉதவிகளையும் செய்து வருகின்றன.
இந்தவேளையில் ஒவ்வொரு நாடுகளின் மனிதாபிமான உதவிகள் ஒருமுகப்படுத்தப்பட்டு அனைத்து மக்களுக்கு
கிடைக்கக் கூடிய வழிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களின் தாயகக்கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரசுக் கிருமியினால் பல்வேறு நன்மைகளும் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள
வேதனையொரு புறம் இருக்க மக்களிடம் ஒற்றுமை, குடும்பங்களுடன் ஒன்றாக இருக்கும் சந்தோசம், முதியவர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் செயற்பாடுகள், உணர்வுகளை மனித நேயத்தை மற்றவர்களுக்கு காட்டும்
மனப்பான்மை, மாசு சுத்தமடைதல், அதனால் மாறிப்போகவிருந்த காலநிலை மாற்றங்கள் மீண்டுவர ஏதுவாய் இருந்தமை, நீர் நிலைகள் சுத்தமாகிப் பறவைகள், விலங்குகள் சுதந்தரத்தை அடைய இவ்வாறு பல்வேறு
படிப்பினைகளை காட்டியிருந்தாலும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் இளையவர்கள் மத்தியில் ஒரு தேசப்பற்றும்
மனிதநேய உணர்வும் தனது பூர்வீகம் பற்றிய தேடலையும், கலைஞர்கள் தமது கலையின் ஊடாக விழிப்புணர்வையும், புதிய ஆக்கபூர்வமான சிந்தனைக்கும், ஒரு குமுகாயம் வாழ தம்முயிரையே கொடுக்கலாம்
என்ற வைத்தியப் பணியாளர்களையும் அவர்களின் பயமற்ற சிந்தனையையும் அந்தசெயற்பாட்டில் ஈழத்தமிழ்
மக்களின் பிள்ளைகள் ஒன்று குறைந்தவர்கள் பயந்தவர்கள் பின்நிற்பவர்கள் அல்ல என்பதையும் இன்றைய இந்த
கொரோனா பேரிடர்க்காலம் எடுத்துக்காட்டியுள்ளது.
நன்றி!
( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)