சித்திரைப் புத்தாண்டின் கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது என்று புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தானத்திற்கு இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கொரோனா தொற்றின் காரணமாக நாட்டின் நிலைமைக்கருத்திற்கொண்டு பொதமக்கள் தற்போது செயல்பட வேண்டும். இதன்காரணமாக இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது என்றார்.
இந்த முறை சித்திரைப் புத்தாண்டு, சித்திரை மாதம் முதலாம்; நாள் அதாவது 13 திங்கட்கிழமை இரவு உதயாதி நாழிகை 32-52இல் திருக்கணித பஞ்சாங்கப்படி இரவு 8.23க்கும், வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 7.26க்கும், தமிழ்ப் புதுவருடமான சார்வரி வருஷம் பிறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.