மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசெயலகம் முன்னால் நாளை காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தி சிங்கள மக்களை குடிமயர்த்த மேற்கொண்ட முயற்சிக்கு கெவிலியாமடு கிராமசேவகர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கிராமசேவகர் உட்பட அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் பௌத்த பிக்குவுக்கு எதிரான கவன ஈர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.