இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் 80 பேர், வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்தவர்கள் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஏனையோர் அவர்களுடன் சமூக தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, குறித்த நபர்களுடன் சமூக தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 19 ஆம் திகதி விமான நிலையம் மூடப்பட்ட நாள் முதல், இலங்கைக்குள் பிரவேசிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது, இம் மாதம் 19 ஆம் திகதி வரையான 30 தினங்கள் நீடிக்ககப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எவரேனும,; ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை இனங்காண்பதற்கு மேற்குறித்த 30 நாள்கள் போதுமானதென அறியப்பட்டுள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.