நாட்டை சிங்கள மயமாக்க பிக்குகள் மும்முரம்-தமிழர் விழிப்படைய வேண்டும்

357 0

pasupathyதமிழ் மக்களை அழித்துவிட்டு நாட்டை முழுச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்காக மிக மோஷமான செயற்பாடுகளை பௌத்த பிக்குமார் சிலர் மேற்கொண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.

இதனால் தமிழர்கள் அனைவரும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பௌத்த பிக்கு இவ்வாறான தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து மட்டுமல்லாது, தமிழர்கள் எல்லாம் புலிகள் என்று கூறுவது, தமிழர்களை அழிப்பதற்கான முயற்சியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் பக்குவம் தமிழர்களிடத்தில் உண்டு எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் 98 வீதமானவர்கள் படித்தவர்கள் உள்ளார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே எமது மூலதனமான கல்வியைக் கற்று அறிவாளர்களாக, இந்த மண்ணில் மனிதர்களாக வாழ்வதற்கு வாழ்வாதாரத்தை வளப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.