யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்துள்ள சிறி சித்திவிநாயகர் கோவில் தாயக மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

1346 0

தாயகத்தில் கொரோனா வையிரஸ் தாக்கம் காரணமாக அன்றாடம் வேலைசெய்து வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்த விடயமே. அவர்களின் பசி போகுக்கும் சிறு துளியாக யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சிறி சித்திவிநாயகர் கோவில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளது.

சிறி சித்திவிநாயகர் கோவிலுக்குள் மாவீரர்களை வணங்கும் தூபி ஒன்று அமைக்கப் பட்டிருக்கின்றது. இத்தூபிக்கு முன்பாக அற்றார் அறப்பசி ஆற்றும் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த உண்டியலில் உள்ள நிதியில் ஆயிரம் யூறோக்களை தாயக மக்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.