மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி தொடர்ச்சியாக இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது.
மட்டகளப்பு கிராம சேவகர் ஒருவரை வீதியில் வைத்து தகாத வார்த்தை பிரயோகங்களுடன் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்ட விதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அச்சுறுத்தும் வகையில் அவர் செயற்பட்டுள்ள வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியமை ஏன் என கேள்வி எழுப்பப்படுகின்றது.