சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா?- மாநகராட்சி தகவல்

256 0

சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை 15 மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 540 பேருக்கு நோய்த்தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 738 பேருக்கும், டெல்லியில் 669 பேருக்கும், தெலுங்கானாவில் 427 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை 15 மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திரு.வி.க.நகர்- 22, அண்ணாநகர்- 19, கோடம்பாக்கம்- 18, தண்டையார்பேட்டை-13, தேனாம்பேட்டை-11, பெருங்குடியில்- 5 பேருக்கு கொரோனா உறுதியானது.

மேலும் வளசரவாக்கம், திருவொற்றியூர், அடையாறில் தலா 4 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும், ஆலந்துர், சோழிங்கநல்லூரில் தலா 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மணலி, அம்பத்தூரில் பகுதியில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.