தேசிய பொருளாதாரத்துடன் தொடர்புடைய பெரும்பாலான மக்கள் பெருந்தோட்டத்துறை உற்பத்திகளுடன் தொடர்புடையவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்திற் கொண்டு பெருந்தோட்ட உற்பத்திகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய தேயிலை கொண்டு செல்லல் நடவடிக்கைகளுக்காக இலங்கை தேயிலை சபையின் ஆலோசனைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளது. இதே போன்று தென்னை, இறப்பர் ,மிளகு போன்றவை தொடர்பிலும் அவற்றுடன் உரிய திணைக்களங்களினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பெருந்தோட்டக் கைதொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சு , ஜனாதிபதி செயலணி, பொலிஸ் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருக்கும் போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொடவை 0777668088 என்ற இலக்கத்திற்கு அழைத்து தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று
இலங்கை தேயிலை சபையின் ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்கவை -0714491618
தென்னை உற்பத்தி அதிகார சபைத் தலைவர் ஜயந்த விக்கிரமசிங்க – 0772289444
இலங்கை சீனி உற்பத்தி அதிகாரசபை தலைவர் ஜானக நிமல சந்திர -077875888
கஜூ உற்பத்தி அமைப்பின் தலைவர் ரத்நாயக்க -0773895602
இறப்பர் உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மங்கல திஸ்ஸ -0718506462,
இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சஞ்சய – 0777955102
என்ற இலக்கங்கள் ஊடாக அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.