கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

265 0

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்த நிதியம் ஸ்தாபிக்ப்பட்டது.

இதற்கமைய, இதன் முதற்கட்டமாக ஜனாதிபதியினால் குறித்த நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது.

இதனையடுத்து, பல்வேறு தரப்பினரும் இதற்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்ற நிலையில், அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும தனக்கு கிடைக்க வேண்டிய ஏப்ரல் மாத சம்பளத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாவையும் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள நன்கொடையாளர்கள் நிதிப் பங்களிப்பு செய்ய முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.