பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், உபகரணம் ஒன்று வெடித்தில், அங்கு பணிபுரியும் தாதி ஒருவர் எரி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சத்திர சிகிச்சை ஒன்றினை அடுத்து இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று இரவு ஏற்பட்டதாக, மருத்துவமனையில் பேச்சாளர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் குறித்த உபகரணம் வெடித்ததால், சத்திரசிகிக்கை மேற்கொள்ளப்பட்ட குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், எரிகாயங்களுக்கு உள்ளான தாதி, பேராதனை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.