நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் பணம் அறவிட இந்த முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமையானது, ஒன்றிணைந்த எதிர்கட்சியை பழிவாங்கும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிவித்துரு ஹெல உருமையவின் பிரதான செயலாளர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் அதனை குறிப்பிட்டார்.
பாதீட்டில் மிகவும் மோசமான விடயமே மக்களின் உரிமைகளை உறுதிசெய்ய நீதிமன்றம் செல்லும் போது வழக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதாகும்.
கடந்த ஆண்டில் நாங்கள் இயன்றளவு அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தோம்.
குறிப்பாக, நிதியமைச்சரை இலக்கு வைத்து, வெட் வரி சட்ட மூலத்திற்கு எதிராக மூன்று முறை நீதிமன்றம் சென்றோம்.
இதனை கருத்தில் கொண்டே, ஒன்றிணைந்த எதிர்கட்சியை பழிவாங்கும் வகையில் வழக்குக்கு கட்டணம் செலுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கம்மன் பில குறிப்பிட்டார்.