சுமார் 50யிற்கும் மேற்பட்ட சீனி கொள்கலன்கள் சுங்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு சோதனை இடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி கொள்கலகளில் கொக்கேய்ன் மறைத்து கொண்டு வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சோதனை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பான சகல சோதனைகளும் நிறைவு செய்யப்படும் வரையில், சீனி கொள்கலன்களை விடுவிக்க முடியாது என, சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.