அத்தியாவசிய நுகர்வு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது ஊரடங்கு சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உல்லாச பயண விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா செயலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலின் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பெரும் எண்ணிக்கையிலான முறைப்படுகள் கிடைத்துள்ளன. இது குறித்து நுகர்வோர் அதிகாரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
ஊரடங்கு சட்டத்தினால் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் உள்ள சிலருக்கு தலா 5000 ரூபா வீதம் வழங்கப்படும். இதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் நிதியை துரித கதியில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது என்றார்.