ட்ரம்ப், இரண்டு முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்களை பெயரிட்டுள்ளார்.

287 0

_90822351_stephenbannonஅமெரிக்க ஜனாதிபதி பதவியை ஏற்றுள்ள டெனால்ட் ட்ரம்ப் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இருவரை பெயரிட்டுள்ளார்.

இதன்படி, தமது அலுவலக பிரதானி மற்றும் மூலோபாய திட்ட பிரதானி ஆகிய பதவிகளுக்கு இருவரை நியமித்துள்ளார்.

குடியரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான ரெயின்ஸ் பிரிபஸ் (Reince Priebus) அலுவலக பிரதானியான நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பிரிட்பேர்ட் செய்தி வலையமைப்பின் (Breitbart News Network) பிரதானி ஸ்டீபன் பெனன் (Stephen Bannon) ட்ரம்பின் தலைமைய மூலோபாய பிரதானியாகவும் பெயரிடப்பட்டுள்ளார்.

இதனிடையே, டெனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வெள்ளை மாளிகையில் தமது பெறுப்புகளை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.