மாத்தளை பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர் விடுதி

290 0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்தளை பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நோயாளர் விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அசேல குமார தலைமையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மாத்தளையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எவரேனும் அடையாளம் காணப்பட்டால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த விடுதியில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.