தமிழகத்திற்கு எதிராக செயல்படும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள்: சீமான்

266 0

201611140959543957_seeman-indictment-for-bjp-and-congress-party-acting-against_secvpfகாவிரி நதி நீர் பிரச்சனையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன என்று சீமான் பேசியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களிடம் நன்மதிப்பை பெறாத அ.தி.மு.க., தி.மு.க. வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சிக்கின்றன. காவிரி நதி நீர் பிரச்சனையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.

அந்த கட்சிகளுக்கு கொள்கை தத்துவம் எதுவும் கிடையாது. தமிழகத் திற்கு பாதிப்பு ஏற்படும் போது குரல் கொடுக்காத இக்கட்சிகள், தற்போது தேர்தலின்போது வாக்குகளை பெற தேடி வருகின்றன.

தமிழகத்தில் அ.தி.மு.க. மீது குற்றம் சாட்டும் பாரதிய ஜனதா, புதுச்சேரியில் மட்டும் கூட்டணி அமைத்தது ஏன்? இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடக்குமா? என்பதை தமிழிசை சவுந்தரராஜன் தெளிவுப்படுத்த வேண்டும்.

வாக்குகள் விற்பனை செய்யும் பொருள் கிடை யாது. பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது தேச துரோகம். இவ்வாறு அவர் கூறினார்.