அனைத்து இலங்கையர்களும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய பொது நிகழ்ச்சி நிரலே நாட்டுக்கு தேவையானதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்;டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் ஒவ்வொருவரின் அதிகாரம் மற்றும் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் மூலம் மாற்றப்படக் கூடாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையின் தேவையை குறைத்து மதிப்பிடக்கூடாதென குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும்
முயற்சிகளை சிலர் எள்ளி நகையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.