கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனாவசியமாக இந்த பிரச்சினைகளை பெரிதாக்கிக்கொண்டால் தேவையற்ற மதவாத பிரச்சினைகளே ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இந்த விடயம் குறித்து அனாவசியமான தகவல்களை பரப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு அவர் விடுத்துள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது உலகமே சுகாதார நெருக்கடியை முகம்கொடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் தேர்தல் தொடர்பான பதற்றமும் நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது தேர்தலை நடத்த வேண்டும் என்றால் நாட்டில் தொற்று அற்ற நிலையை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.