அரச உடமைகளை அரசாங்கம் விற்பனை செய்கிறது – ஜே.வி.வி

322 0

anurakumara-554feநாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதாக கூறி அரசாங்கம் அரச உடமைகளை விற்பனை செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த 68 வருடங்களாக குடும்ப அரசியல் மூலமான பொருளாதார கொள்கையை முன்நிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீரளித்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.