கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்

217 0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நால்வருக்கும், குறித்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லையென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சமூகத்தில் கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களும் இருக்கலாமென, அச்சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இணைந்திருப்பார்களானால், அதனால் பாரிய நோய் தொற்று ஏற்படக்கூடுமென, சங்கத்தின் பிரதித் தலைவர் சாரத கன்னங்கர அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

எனவே, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையிட்டு, மக்கள் முன்னரைவிட சுகாதார விதிமுறைகளை அதிகளவில் பின்பற்ற வேண்டுமென, அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்   உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

குறித்த நபர் அண்மையில் இத்தாலியில் இருந்து வருகைதந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.