அரசியல் அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு சென்று பபுவா நியுக்கினியா மற்றும் நவூறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை அவுஸ்திரேலிய பிரமர் மல்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கு அமைய இந்த தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உண்மை நிலையை ஆராய்ந்து தெரிவு செய்யபடுபவர்கள் மீள அமெரிக்காவில் குடியமர்த்தபடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பபுவா நிவ்கினியாவில் உள்ள மனுஸ் தீவு மற்றும் நவ்று தீவு என்பனவற்றில் ஆயிரத்து 200 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலியாவிற்கு சென்று அகதி அந்தஸ்து கோருபவர்களை மீள அவர் புறப்பட்ட இடத்திற்கே அனுப்பி வைக்கும் கொள்கையை தற்போது அவுஸ்திரேலியா கொண்டுள்ளது.
இந்த கொள்கையினையும் அகதிகள் அவுஸ்திரேயாவிற்கு வெளியே உள்ள தீவுகளில் பராமரிக்கும் தன்மை குறித்து மனித உரிமை ஆர்வளர்கள் உட்பட பல தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் படி படியாகவே இந்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்படும் எனவும் அவுஸ்திரேலிய பிரமர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளை அமெரிக்கா தனியாக மேற்கொள்வதுடன் அமெரிக்காவின் எந்த பகுதியில் அவர்களை மீள குடியமர்த்துவது குறித்தும் அமெரிக்காவே முடிவெடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நவூறு மற்றும் பப்புவா நியுக்கின ஆகிய நாடுகளில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோரி தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.