ஆறுநாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இஸ்ரேல் அதிபர் ரெவென் ரிவ்லின் இன்று மும்பை வந்தடைந்தார்.சண்டிகர் நகரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான விவசாய தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கேற்கும் ரெவ்லின், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரை சந்தித்து இந்தியா-இஸ்ரேல் இடையிலான கால் நூற்றாண்டு கால நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துவார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் பலியான இந்திய வீரர்களின் நினைவிடம் மற்றும் மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பலியானவர்களின் நினைவிடம் ஆகியவற்றில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
ரெவென் ரிவ்லினுடன் அவரது மனைவி நெச்சாமா ரிவ்லின் மற்றும் இஸ்ரேலின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை சேர்ந்த தலைவர்களும், பிரதிநிதிகளுக்கும் அந்நாட்டு அரசின் பலதுறைகளை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளும் வந்துள்ளனர்.