வடக்கு கிழக்கில் நாளை மறுதினம் முதல் மழை

309 0

117b62df8fee47ca61404f1f4b6706a7வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை மறுதினம் முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அவதான நிலையம் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலையில் போது கடுங்காற்றும் இடைக்கிடையில் இடிமின்னலும் ஏற்படும் எனவும் இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.