இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை மீறுவோறுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதம் விதிக்கும் திட்டத்தை எந்தவித மாற்றமும் இன்றி செயற்படுத்தவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சாலை சட்டங்கள் தொடர்பில் ஒழுங்கு மற்றும் மதிப்பினை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாலை விதிகளை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதத்தை விதிக்கும் நடைமுறையை நீக்குமாறு, தனியார் பஸ் சங்கங்கள் விடுத்த வேண்டுகோள் குறித்து பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.