விமல் வீரவங்சவிடம் மீண்டும் விசாரணை

321 0

wimal-300x200தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச காவல்துறையின், நிதி மோசடி விசாரணைப் பிரிவில் தற்சமயம் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, ஜனாதிபதி செயலகத்தின் வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர், அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்வம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த நான்காம் திகதி, காவல்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அன்றைய தினம் அங்கு வருகை தந்த அவர், சுகவீனம் காரணமா வாக்கு மூலம் வழங்காது திரும்பிச் சென்றார்.

அதனை தொடர்ந்து இந்த மாதம் 9ஆம் திகதி மீண்டும் காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், அது தொடர்பான அழைப்பு தமது தரப்புக்கு கிடைக்கப்பெறவில்லை என, விமல் வீரவங்ச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் இன்று முற்பகல் 9.30க்கு காவல்துறையின் நிதி மோசடி விசாரணை பிரிவில் விமல் வீரவங்ச முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.