சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு

358 0

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஷிகூ நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்குள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடுமையாக உலுக்கியது.சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதே சமயம் சீனா கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறது. எனினும் அங்கு கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இந்த நிலையில் அந்த நாட்டின் சிச்சுவான் மாகாணத்தின் ஷிகூ நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்குள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடுமையாக உலுக்கியது. சுமார் 800 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

இதன் மூலம் 79.83 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.86 கோடியே 5 லட்சத்து 51 ஆயிரம்) பொருளாதாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். எனினும் இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.