நீங்கள் ரோட்டுக்கு வந்தால் நான் உங்கள் வீட்டுக்கு வருவேன்… கவனத்தை ஈர்த்த கொரோனா விழிப்புணர்வு

249 0

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து போலீசார் சாலையில் எழுதி உள்ள கொரோனா விழிப்புணர்வு வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். சிலர் கொரோனா குறித்த அச்சம் இன்றி தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் நடமாடுகின்றனர். சிலர் வாகனங்களிலும் பயணம் செய்கின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உரிய அறிவுரைகள் கூறி அனுப்புகின்றனர். தொடர்ந்து பல்வேறு வழிகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுக்கு எளிதில் புரியும் வகையில் நாகேனஹள்ளி செக்போஸ்ட்டில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை சாலையில் எழுதி வைத்துள்ளனர். நீங்கள் ரோட்டுக்கு வந்தால் நான் உங்கள் வீட்டுக்கு வருவேன்’ என  எழுதப்பட்டுள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதேபோல் பல்வேறு இடங்களில் கொரோனா வைரசின் வடிவமைப்பு போன்று ஹெல்மெட் அணிந்தும்  போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.