அரசியல் கைதிகளின் சடலங்களை வட கொரியா தனது பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் தலைமையிலான வட கொரியா, சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பயிர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய உயர்வை கண்டது. ஆனால் அதற்கு பின்னால் பயங்கரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
கிம் இல் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்திய முன்னாள் கைதி, பியோங்யாங்கிற்கு வடக்கே அமைந்துள்ள கெய்கோன் வதை முகாமின் நரகத்திலிருந்து தப்பியபின் கொடூரமான சம்பவம் குறித்து அம்பலப்படுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தனது ஏவுகணை சோதனைகளை முடுக்கிவிட்ட நிலையில், வட கொரியா ஏற்கனவே சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டு வருகிறது. வட கொரியா இந்த உலகில் தனி ஒரு உலகமாக செயல்பட்டு வருகிறது.
வடகொரியா நிலங்கள் அதிக உரமூட்டப்பட்டவை மற்றும் விவசாயம் அங்கு வெற்றிகரமாக உள்ளது, ஏனெனில் புதைக்கப்பட்ட மனித உடல்கள் இயற்கை உரங்களாக செயல்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.
மக்களை மலைப்பகுதிகளில் கூட புதைத்துள்ளனர். ஒருமுறை, ஒரு குழந்தை மலைகளில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார். ஏனெனில் புதைக்கும்போது அவர்கள் அதை சரியாக மறைக்க மறந்துவிட்டார்கள் எனக்கூறியுள்ளார்.
முன்னதாக இதேபோன்ற குற்றசாட்டை தென் கொரியாவின் சியோலுக்கு தப்பிச் சென்றபின், வட கொரியாவில் உள்ள மனித உரிமைகளுக்கான குழுவுக்கு ஒரு பெண் தனது அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரிய மனித உரிமை குழுவின் நிர்வாக இயக்குனர் கிரெக் ஸ்கார்லடோயு கூறுகையில், ஒரு புதிய தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, கிம் ஆட்சியின் குற்றங்களில் இருந்து விடுபடவில்லை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
“இது வட கொரியா மக்களுக்கு எதிராக கற்பனை செய்யமுடியாத கொடுமைச் செயல்களைச் செய்வதன் மூலம் தன்னைக் காத்துக் கொண்ட ஒரு ஆட்சி” என்று அவர் கூறினார்.