டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டங்கள்(காணொளி)

409 0

americaஅமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கலவரத்தை தாங்கள் சமாளித்து வருவதாக ஓரேகான் மாநிலத்திலுள்ள போர்ட்லாண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளை நோக்கி பல்வேறு பொருட்கள் எறியப்படுவதாகவும்இ கார் சன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் போராட்டக்காரர்கள் பலரை பொலிஸார் கைது செய்தும் உள்ளனர்.

அதேவேளை குறித்த ஆர்ப்பாட்டங்கள் நியாயமற்றவை எனவும்இ ஊடகங்கள் பொதுமக்கள் தூண்டிவிடுவதாகவும் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் டொனால்ட் டிரம்ப் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இதன்போது ஒபாமா நல்லதொரு மனிதர் என்று டிரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.