உலக அளவில் கொரோனா வைரஸூக்கு பலியானோர் எண்ணிக்கை 42,341

309 0

உலக அளவில் கொரோனா வைரஸூக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 4,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரஸூக்குப் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 42,341 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது. அதேபோல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 859,796 பேரை கடந்துள்ளது. சுமார் 178,301 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இத்தாலியில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். கிட்டதட்ட 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 189,618 ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,883 ஆக உள்ளது. வைரஸின் பிறப்பிடமான சீனாவில், இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.