குமார் குணரட்ணத்தின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
சோஷலிச முன்னிலை கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தின் விடுதலையை வலியுறுத்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
சோஷலிச முன்னிலை கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் அவரது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை சோஷலிச கட்சியின் உறுப்பினர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்ட்டாலின் குமார் குணரத்தினத்தின் சகோதரி நிரஞ்சனி குணரத்திணம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் புபுது ஜயக்கொட மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது குமார் குணரத்தினத்தை நல்லாட்சி அரசாங்கத்தால் விடுதலை செய்ய வேண்டும் எனவும் மீளவும் அவருக்கு இலங்கை பிராஜாவுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.