கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களுக்கு இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதற்கு தனிமைப்படுத்தல் அவசியம் என்பதனால் நேற்று வெளியிட்ட செய்தியினை இன்று மீண்டும் அறியத்தருகின்றோம்.
அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து குறித்த தினத்திற்கு பின்னர் வருகை தந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மார்ச் 16 ஆம் திகதிக்கு முதல் நாட்டுக்குள் வந்தவர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இன்று மதியம் 12.00 மணிக்கு முன்னர் பதிவு செய்யப்படவில்லையாயின் 12 மணிக்குப் பின்னர், பொலிசார் சந்தேக நபர்களை பதிவேட்டின் படி தேடி அவர்களை கைது செய்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.
உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் அவ்வாறு இருந்தால் உடனடியாக 119, 1933 என்ற இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ தகவலை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.